Yaarukaga azhudhan book review

      யாருக்காக  அழுதான் 

                

                        Image credits to amazon.in


யாருக்காக அழுதான் என்னும் புத்தகம் ஜெயகாந்தன் அவர்களால் இயற்றப்பட்ட குறுநாவல் தொகுப்பு. இப்புத்தகம் இரண்டு குறுநாவல்களின் தொகுப்பு. இப்புத்தகத்தை பற்றிய ஒரு பதிவுக்கு மேற்கொண்டு படிக்கவும். 

நான் படிக்க துடித்துடித்து எடுத்த  முதல் ஜெயகாந்தனின் புத்தகம். என் துடிப்பிற்கேற்ப இப்புத்தகம் என்னை ஏமாற்றவில்லை, அவ்வளவு அருமையான படைப்பு என்றே கூற வேண்டும் . இதில் மொத்தம் இரண்டு கதைகள்- யாருக்காக அழுதான் & எனக்காக அழு. 


முதல் கதையை பற்று பேசுவோம். ஒருத்தன் இவ்வளவு நல்லவனாக இருக்க முடியுமா என்று வியக்க வைக்கும். கதையின் தலைப்புதான் இதன் கடைசி வரியாக அமையும், ஆனால் அதன் பதிலை கற்க எனக்கு நாட்கள் ஆயின. மிகவும் உணர்ச்சி பூர்வமான கதை. இந்த கதையில்- சோசப், நாயுடு,  முதலாளி, ஒரு சேட்டு - கதாப்பாதிரங்கள் . ஒரே இடத்தில் நடக்கும் கதை இது.  இதில்,  சோசப் மற்றும் நாயுடுவுக்கு இடையில் நடக்கும் உரையாடல் மனதை உருக்கும். கதையின் ஓட்டத்தில் ஆங்காங்கே பல வாழ்க்கை தத்துவங்கள் நிறைய உள்ளன. 


இரண்டாம் கதை- எனக்காக அழு. சுருக்கமாக கூற வேண்டும் என்றால், " நல்லவனாக இருக்கும் கெட்வனும்,  கெட்ட பெயர் பெற்ற நல்லவனின் கதை". வெளியே காட்டும் முகத்தை வைத்தே நாம் யார் என்று இவ்வுலகம் எடைப்போடுகிறது என்ற கசப்பான உண்மை நிலையை ஜெயகாந்தன் அழகிய முறையில் கூறியுள்ளார்.


தமிழ் இலக்கிய புத்தகங்களை படிக்க தூண்டுவதே என் நோக்கம். மேலும் பல சுவாரஸ்யமான புத்தக பரிந்துரைக்கு Goodreads தளத்தை பின்தொடரவும். 

காணொலியாக கேட்க - எனக்கு மிகவும் பிடித்த தளம். 

 

Post a Comment

0 Comments